ஊடகவியலாளர் சஹாப்தீனின் புதல்வி பாத்திமா திக்ரா, பாடசாலையில் முதல்நிலை மாணவியாக சித்தி

🕔 October 9, 2015

Fathima Thikraசிரேஷ்ட ஊடகவியலாளர் எம். சஹாப்தீனின் புதல்வி பாத்திமா திக்ரா, இம்முறை நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 177 புள்ளிகளைப் பெற்று, பாடசாலையில் முதல்நிலை மாணவியாகச் சித்தியடைந்துள்ளார்.

நிந்தவூர் அல் மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் மாணவியான பாத்திமா திக்ரா, தற்போது வெளியாகியுள்ள புலமைப் பரிசில் பரீட்சை முடிகளின் படி, 177 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர் – சிரேஷ்ட ஊடகவியலாளரும், ஆசிரியருமான எம்.சஹாப்தீன் தம்பதியரின் கனிஸ்ட புதல்வியாவார்.

பாத்திமா திக்ரா கல்வி கற்கும் மேற்படி நிந்தவூர் அல் மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில், இம்முறை 11 பேர் ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.

அந்த வகையில் பாத்திமா திக்ரா, 177 புள்ளிகளைப் பெற்று, பாடாசாலையில் முதல் நிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்