ஜப்பான் செல்கிறார் ஞானசார தேரர்: 2020 வரை தங்கியிருக்க குடியுரிமை வீசாவும் கிட்டியது
ஜப்பானில் மூன்று ஆண்டுகள் வசிப்பவதற்கான குடியுரிமை வீசாவை ஞானசார தேரர் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயர் கல்வி மற்றும் சமய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு, அவருக்கு இந்த குடியுரிமை வீசா வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பொருட்டு, ஞானசார தேரர் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த காலப்பகுதியில், அவர் இந்த குடியுரிமை வீசாவை பெற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் ஜப்பானுக்குப் பயணிக்கும் பொருட்டு, தனக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு நேற்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் ஞானசார தேரர் முறையீடு செய்தார்.
அவரின் முறையீட்டைக் கவனவத்திற் கொண்ட கொழும்பு மேலதி நீதவான் காஞ்சனா டி சில்வா, ஞானசாரவுக்கு நீதிமன்றம் விதித்துள்ள வெளிநாட்டுக்கான பயணத்தடையை ஓகஸ்ட் 23ஆம் திகதி வரை தளர்துமாறு உத்தரவிட்டார்.
அந்த வகையில், அடுத்த வழக்கு விசாரணைத் திகதி வரை மட்டுமே வெளிநாட்டுக்கான இந்தப் பயணத்தடை தளர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெலிக்கடைப் பகுதியில் 2017ஆம் ஆண்டு பொலிஸாரின் கடமைகளைச் செய்வதற்கு ஞானசார தடையாக இருந்தார் எனும் குற்றச்சாட்டில் தொடரப்பட்ட வழக்கில், ஞானசாரவுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டது.