அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலை விடுதியில் நடப்பது என்ன? மேலதிகாரிகள் கவனியுங்கள்

🕔 June 6, 2019

ட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியர்களுக்கான விடுதியில் விரும்பத்தகாத செயற்பாடுகள் இடம்பெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குறித்த விடுதியை அந்த வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி பயன்படுத்துவதாகவும், ஆனால் முறையான அனுமதியைப் பெறாமலும், விடுதியைப் பயன்படுத்துவதற்கான கொடுப்பனவைச் செலுத்தாமலும் சட்ட விரோதமான முறையிலேயே, குறித்த வைத்தியப் பொறுப்பதிகாரி அங்கு தங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியை அணுகிப் பேசிய போதும், அவர்களுக்கு பொறுப்பற்ற விதத்தில் பதில் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, இவ்விவகாரம் தொடர்பில் ஆயுர்வேத திணைக்கள ஆணையாளருக்கும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் முறைப்பாடுகள் எழுத்துமூலம் அனுப்பப்பட்டதாகவும், ஆனால் இதுவரை அதற்கு எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும், அப்பகுதியிலுள்ள மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே மேற்குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட மேலதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், வைத்தியசாலையின் பெயருக்கு களங்கம் ஏற்படுவதனை தடுக்குமாறும் அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்