பால்குடிக்கும் கன்றுக் குட்டிகள் உட்பட, நான்கு மாடுகளை இறைச்சிக்காக அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்றவர்கள் கைது

🕔 October 9, 2015

Cow - 01– க.கிஷாந்தன் –

னுமதிப் பத்திரமின்றி லொறியொன்றில் மாடுகளைக் கொண்டு சென்ற சந்தேக நபர்களை அக்கரைப்பத்தனைப் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.

ஹட்டன் பிரதேசத்திலிருந்து பசு மாடு இரண்டையும் பால்குடிக்கும் வயதைக் கொண்ட இரண்டு கன்றுக்குட்டிகளையும், இறைச்சிக்காக அனுமதி பத்திரம் இல்லாமல் அக்கரப்பத்தனை பசுமலை பிரதேசம் வரை, லொறி ஒன்றில் கொண்டு செல்லும் போது, ஹட்டன் டயகம பிரதான வீதியில் அக்கரப்பத்தனை பகுதியில் வைத்து இன்று  காலை 6 மணியளவில், அக்கரப்பத்தனை பொலிஸார் குறித்த லொறியை மறித்து விசாரணைக்குட்படுத்தியபோது, அனுமதி பத்திரம் இல்லாமல் மாடுகளை கொண்டு செல்வதாக தெரியவந்தது.

இதனையடுத்து, மாடுகளை கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளதோடு, குறித்த லொறியையும் கைது கைப்பற்றினர்.Cow - 03Cow - 02

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்