றிசாட், ஹிஸ்புல்லா, ஆசாத் சாலி ஆகியோருக்கு எதிரான முறைப்பாடுகளைப் பதிய பொலிஸ் குழு நியமனம்

🕔 June 4, 2019

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன், முன்னாள் ஆளுநர்களான ஆசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் தொடர்பான புகார்களை ஏற்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இவர்களை பற்றிய புகார்களை முன்வைப்பதற்கு மூன்று சிரேஷ்ட அதிகாரிகளை கொண்ட குழுவொன்று பொலிஸ் தலைமையகத்தில் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.

காலை 8 முதல் மாலை 4 மணி வரை செயல்படும் இந்த புகார் பதிவு அலுவலகத்தில், இந்த மூவர் பற்றிய புகார்களை இன்று செவ்வாய்க்கிழமை தொடக்கம், வரும் 12ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுடன், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் தொடர்புள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்டிருந்தது.

அத்துடன், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோருக்கு சார்பாக கருத்து தெரிவித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ், மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி விசாரணை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்