‘பள்ளிக்கூடம் – 90’ நண்பர்கள் அமைப்பின் இப்தார் நிகழ்வு
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் கல்வி கற்ற நண்பர்களின் ‘பள்ளிக்கூடம் – 90’ எனும் அமைப்பினுடைய இஃப்தார் நிகழ்வு இன்று திங்கட்கிழமை, அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டப வளாகத்தில் நடைபெற்றது.
இந்த இப்தார் நிகழ்வில், அமைப்புக்கான ரி.ஷேர்ட் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
இதன்போது அமைப்பின் தலைவர் ஏ.ஏ. பனீஸ் மற்றும் செயலாளர் எஸ்.எல். முனாஸ் ஆகியோர் உறுப்பினர்களுக்கு ரி.ஷேர்ட்களை வழங்கி வைத்தனர்.