09 அமைச்சர்கள் ராஜிநாமா: பெயர்களும், அமைச்சுக்களும்

🕔 June 3, 2019

– மப்றூக் –

மூன்று முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளின் பதவிகளை பறிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, அத்துரலியே ரத்ன தேரர் உண்ணா விரதம் இருந்து வந்த நிலையில், மொத்தமாக 11 பேர் இன்று ராஜிநாமா செய்துள்ளனர்.

அந்த வகையில் 04 அமைச்சர்கள், 04 ராஜாங்க அமைச்சர்களுடன், பிரதியமைச்சர் ஒருவரும் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனர்.

இதன் காரணமாக, தற்போதைய அரசாங்கத்தில் முஸ்லிம்கள் எவரும் அமைச்சராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இன்றைய தினம் ஆளுநர்கள் ஹஸ்புல்லா மற்றும் ஆசாத் சாலி ஆகியோர் தமது பதவிகளை ராஜிநாமா செய்திருந்தனர்.

ராஜிநாமா செய்த அமைச்சர்களின் விவரம் வருமாறு

அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர்கள்

  1. ரஊப் ஹக்கீம் – நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சு
  2. றிசாட் பதியுதீன் – கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்ட காலம் இடம்பெயர்ந்துள்ளவர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர்.
  3. எம்.எச்.எம். ஹலீம் – அஞ்சல் அலுவல்கள், முஸ்லிம் விவகார அமைச்சு
  4. கபீர் ஹாசிம் – நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர்

ராஜாங்க அமைச்சர்கள்

  1. எச்.எம்.எம். ஹரீஸ் – உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சு
  2. பைசால் காசிம் – சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு
  3. எம்.எஸ்.எஸ். அமீர் அலி – கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமியப் பொருளாதார அமைச்சு
  4. அலிசாஹிர் மௌலானா – சமூக வலு வூட்டல் அமைச்சு

பிரதியமைச்சர்கள்

அப்துல்லா மஹ்றூப் – துறைமுகங்கங்கள், கப்பல்துறை அமைச்சு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்