ஹிஸ்புல்லாவின் ராஜிநாமா கடிதம்; முழுமையான தமிழாக்கம்
கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தனது பதவியை ராஜிநாமாச் செய்து, அதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளார்.
அந்த வகையில், ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தின் தமிழாக்கத்தை இங்கு வழங்குகின்றோம்.
‘2019, ஏப்ரல் 21 ஆம் திகதிய தீவிரவாதத் தாக்குதலை முஸ்லிம் உலமாக்கள், முஸ்லிம் சமூகத்தவர்கள் கண்டித்ததன் பின்னரும் , முஸ்லிம் சமூகத்தவரை உளவியல் யுத்தம் ஒன்றின் மூலம் பலவீனப்படுத்தும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதை இவ்விடத்தில் பதிவு செய்ய விளைகிறேன்.
அனைத்து சமூகத்துக்கும் பொதுவான ஒரு ஆளுநராக, நேர்மையுடனும் உண்மையுடனும் சேவை ஆற்றினேன். எப்படி இருப்பினும், எனது சமூகத்தினை இனவாதிகள் பலவீனப்படுத்தும் முயற்சிகளுள் ஒன்றாக, என்னை எக்காரணமும் இன்றி பதவி விலகக் கோரி இருக்கிறார்கள்.
மேலும், நான் பதவி விலகாத பட்சத்தில் எனது சமூகத்தின் சொத்துக்கள் மற்றும் வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த இருப்பதாகவும் கூறி இருக்கிறார்கள். நான் பதவி விலகாத பட்சத்தில் எனது சமூகத்திற்கு யாதாயினும் ஆபத்து நிகழலாம் என்பதை என்னால் உணர முடிகிறது.
எனது சமூகத்தின் பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்படாத நிலையில், சமூகத்தின் நலனை மாத்திரம் முன்நிறுத்தி எனது ராஜினாமாவை சமர்ப்பிக்கிறேன். எனது ராஜினாமா எனது சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உங்கள் கரங்களைப் பலப்படுத்தும் என எதிர்பார்க்கிறேன்’.
தொடர்பான செய்தி: முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமையினால் ராஜிநாமா செய்தேன்: ஹிஸ்புல்லா