ராணுவ சீருடையை ஒத்த, சிறுவர்களுக்கான உடுப்புக்களை விற்றவர்களுக்கு, சிறைத்தண்டனை

🕔 June 1, 2019

– பாறுக் ஷிஹான் –

ராணுவ சீருடைக்கு சமனான ‘கெமா’ என்றழைக்கப்படும் உடுதுணிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்தார்கள் எனும் குற்றத்துக்காக 08 முஸ்ஸீம்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு மாதம் சிறைத்தண்டனை வழங்கி பருத்திதுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி நளினி சுபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

பருத்திதுறை பொலிஸார் கடந்த 14ஆம் திகதி மேற்கொண்ட விசேட தேடுதலின் போது, நகரப்பகுதி கடைகளில் குறித்த உடுதுணிகள் விற்பனைக்காக காட்சிபடுத்தப்பட்டிருந்த குற்றத்திற்காக காத்தான்குடி பகுதியை சேர்ந்த 08 வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.

இதனயைடுத்து பதில் நீதிவான் இவர்களுக்குப்  பிணை வழங்கியிருந்தார்.

பின்னர்  நேற்று வெள்ளிக்கிழமை குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட் போது, 08 வியாபாரிகளுக்கும் ஒரு மாத சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இவ்வாறு கைதான 08 முஸ்லீம் வர்த்தகர்களும் சிறுவர்களுக்கான ஆடைகளை விற்பனை செய்பவர்களாவர்.

இவர்கள் வசமிருந்து மீட்கப்பட்ட ‘கெமா’ உடுதுணி, சிறுவர்களுக்கானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்