பயங்கரவாத தாக்குதலின் பின்னர் கைப்பற்றப்பட்ட பொருட்களின் விவரங்கள் வெளியானது

🕔 May 30, 2019

ஸ்டர் தினத் தாக்குதலை அடுத்து பாதுகாப்புத்தரப்பினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட, பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்ட பொருட்கள் குறித்து, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், கைப்பற்றப்பட்ட பொருட்களில் 23 மடிக்கணினிகள், 03 கணனிகள், 138 கைப்பேசிகள், 30 ஹார்ட் டிஸ்குகள் , 12 பென் ட்ரைவ்கள் மற்றும் 142 சிம் அட்டைகள் அடங்குவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த தாக்குதல் தொடர்பில் கைது செய்ப்பட்டவர்களில் 66 பேர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலும், 21 பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்