மஹிந்தவுக்கு குண்டு துளைக்காத வாகனத்தைப் பெற்றுக் கொடுக்க, அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்தார் ரணில்

🕔 May 29, 2019

திர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு, குண்டு துளைக்காத வாகனம் ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கான அனுமதியைக் கோரும் அமைச்சரவைப் பத்திரத்தை, ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் அமைச்சரவையில் சமர்பித்தார்.

தற்போதை பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற் கொண்டு, எதிர்கட்சித் தலைவருக்கு, துண்டு துளைக்காத வானத்தை பெற்றுக் கொடுக்கும் பொருட்டு, இந்த அமைச்சரவைப் பத்திரம் சமர்பிக்கப்பட்டதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இருந்த போதும், மேற்படி அமைச்சரவைப் பத்திரம் தொடர்பில், நிதியமைச்சர் கவனம் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அடுத்த வாரம் அமைச்சரவைக் கூட்டத்தின் போது, இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு, ஜனாதிபதி அறிவுறுத்தியதாகவும் குறித்த ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்