நாத்தான்டிய, மினுவாங்கொட வன்முறை: 46 பேருக்கு பிணை

🕔 May 29, 2019

நாத்தாண்டிய- கொட்டராமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களையடுத்து, கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, சந்தேகநபர்கள் 31 பேர், இன்று புதன்கிழமை சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மாரவில மாவட்ட நீதவான் சிறிமெவன் மஹேந்திர ராஜா முன்னிலையில், சந்தேகநபர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோதே, நீதவான்  தலா 50,000 ரூபாய் சரீரப் பிணையில் அவர்களை விடுதலை செய்துள்ளார்.

இம் மாதம்  13 ஆம் திகதி, நாத்தாண்டிய- கொட்டராமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்த அதேவேளை, மற்றுமொருவர் பாரிய வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில் தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மினுவங்கொட பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த நபர்களில் 15 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தலா 15 லட்சம் ரூபாய் சரீரப் பிணையில் குறித்த நபர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்