அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு, மேலதிகமாக இன்னுமொரு அமைச்சு

🕔 May 29, 2019

கிராமிய பொருளாதார அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக இவர் பதவி வகிக்கத் தக்கதாக, மேற்படி அமைச்சுப் பதவி இவருக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் மொனராகல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராவார்.

இதேவேளை, பீ. ஹரிசன் – விவசாய, கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சராக இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்