அட்டாளைச்சேனையில் ஆயிரக்கணக்கான பாரை மீன்கள்; ஒரே வலையில் சிக்கின

🕔 October 8, 2015

Fish - 09
– முன்ஸிப் –

ட்டாளைச்சேனை பிரதேச மீனவர்களுக்கு இன்று வியாழக்கிழமை அதிகளவான பாரை மீன்கள் கிடைத்தன.

அட்டாளைச்சேனை கோணாவத்தைப் பகுதியிலுள்ள கரைவலை மீனவர்களுக்குச் சொந்தமான வலையிலேயே இவ்வாறு பாரை மீன்கள் சிக்கியிருந்தன.

சுமார் 5000 பாரை மீன்கள் இவ்வாறு கிடைத்ததாகவும், இவை சுமார் 01 கோடி ரூபாய் பெறுமதியுடையவை எனவும் அறிய முடிகிறது.

தற்போது சில்லறைச் சந்தையில் பாரை மீன் ஒரு கிலோ 700 ரூபாவுக்கு விற்பனையாகின்றது.

அம்பாறை மாவட்ட கரையோரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக, அதிகளவு மீன்கள் கிடைத்து வருகின்றன.

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவும், இவ்வாறு அதிகளவிலான பாரை மீன்கள் சிக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மிக அதிக காலமாக, இப் பிரதேசத்தில் மீனவர்கள் போதியளவு தொழிலின்றி காணப்பட்ட நிலையில், இவ்வாறு அதிகளவிலான பாரை மீன்கள் கிடைத்திருப்பது, மீனவர்களிடையே மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தியுள்ளது.Fish - 03Fish - 08Fish - 04Fish - 01

Fish - 11Fish - 06Fish - 10

Comments

புதிது பேஸ்புக் பக்கம்