‘தர்மச் சக்கரம்’ ஆடை விவகாரம்: மஸாஹிமாவை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

🕔 May 27, 2019

ர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட ஆடையை அணிந்திருந்தார் எனும் குற்றச்சாட்டில், பதுளை சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மஸாஹிமா எனும் பெண்ணை, எதிர்வரும் 03ஆம் திகதி வரை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு மஹியங்கணை நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 17ஆம் திகதி தர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட ஆடையை அணிந்த குற்றச்சாட்டின் பேரில் மேற்படி பெண்ணை ஹசலக பொலிஸார் கைது செய்து, மறுநாள் மஹியங்கணை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்திருந்தனர்.

அதன்போது குறித்த பெண்ணை இன்று 27ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், மேற்படி பெண்ணுக்காக நிதிமன்றில் சட்டத்தரணி சறூக் ஆஜரான போதும், அவருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்து, எதிர்வரும் 03ஆம் திகதி வரை, தொடர்ந்தும் அவரைத் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்பான பதிவு: நயோமி கோல்மனும், கொலங்கொட மஸாஹினாவும்: அடிப்படை உரிமைகளுக்கு எதிரான நெருக்குவாரங்கள்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்