நாரஹேன்பிட்டியில் பெண் ஒருவர் உட்பட 23 பேர் கைது: ஆயுதங்களும் சிக்கின:
நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் இன்று காலை தொடக்கம் மாலை வரை பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, பெண் ஒருவர் உட்பட 23 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொருஸாரும் ராணுவத்தினரும் இணைந்து இன்று காலை 7.00 மணி தொடக்கம் மாலை 3.00 மணிவரை, இந்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
15 கிலோகிராம் வெடிமருந்து, 06 வாள்கள், ராணுவத்தினர் அணியும் தொப்பிகள், 14 துப்பாக்கி ரவைகள், 29 கைத் தொலைபேசிகள், 02 கணிணி டப்ளட், 04 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 137,820 ரூபா பணம் ஆகியவை இந்த நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டன.
இவை அனைத்தும் 05 வீடுகளில் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாரஹேன்பிட்டி பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.