றிசாட், ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பௌத்த தேரர்கள் இருவர் முறைப்பாடு
அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மற்றும் கிழக்கு மாகண ஆளுநர் ஏ.எல்.ஏ.ம் ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
பௌத்த தேரர்கள் இருவர் இந்த முறைப்பாடுகளைத் தெரிவித்துள்ளனர்.
குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.