ஜோன்ஸ்டன் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் மோசடி குறித்து, றிசாட்டிடம் வாக்கு மூலம்

🕔 May 25, 2019

ங்கா சதொச நிறுவனத்தில் அரிசி கொள்வனவின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி சம்பந்தமாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிசாட் இன்று சனிக்கிழமை பொலிஸ் நிதி மோசடி பிரிவில் வாக்குமூலம் ஒன்றினை வழங்கியிருந்தார்.

2014 -2015ம் ஆண்டு காலப்பகுதியில் லங்கா சதொச நிறுவனத்திற்கு 257,000 மெட்ரிக் தொன் அரிசி கொள்வனவு செய்யும் போது இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடி தொடர்பில் அமைச்சர் வாக்கு மூலம் வழங்கியிருந்தார்.

எவ்வாறாயினும் மோசடி இடம்பெற்றதாகக் கூறப்படும் காலப்பகுதியில், கூட்டுறவு அமைச்சராக ஜோன்ஸ்டன் பெனாண்டோ பதவி வகித்தார் என்பதும், அவரின் கீழேயே லங்கா சதொச நிறுவனம் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் சுமார் 05 மணி நேரம் அமைச்சர் றிசாட்டிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

காலை 10.00 மணி முதல் அமைச்சரிடம் வாக்கு மூலம் பெறப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பில் கடந்த காலங்களிலும் அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் வாக்கு மூலம் பெறப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்பான செய்தி: ஆணைக்குழுவுக்கு, அழைக்கப்பட்டமை தொடர்பில் பொய் பிரசாரம்; விளக்குகிறார் அமைச்சர் றிசாத்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்