கைது செய்யப்பட்ட குருணாகல் வைத்தியர், சிஐடி யிடம் ஒப்படைப்பு

🕔 May 25, 2019

குருணாகல் வைத்தியசாலையில் பணியாற்றும் 42 வயதுடைய செய்கு சியாப்தீன் மொஹமட் சாபி என்ற வைத்தியர் கைது செய்யப்பட்டு, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் (சிஐடி) ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

04 ஆயிரம் சிங்களப் பெண்களுக்கு கர்ப்பத்தடை சிகிச்சை செய்தார் என, இவர் குறித்து திவயின பத்திரிகையில் செய்தியொன்று வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், சந்தேகத்துக்கிடமான வகையில் அதிக சொத்துச் சேர்த்தார் எனும் குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர்  மேலதிக விசாரணைகளுக்காக சி. ஐ. டி.யினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு இந்த வைத்திரை பெலிஸர் கைது செய்திருந்தனர்.

குறித்த வைத்தியரின் வருமான வழிவகைகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

தொடர்பான செய்தி: 04 ஆயிரம் சிசேரியன் செய்வதற்கு 50 வருடம் தேவை: திவயின வெளிட்ட செய்தியின் சதியை, அம்பலமாக்கினார் அனுர குமார

Comments

புதிது பேஸ்புக் பக்கம்