நீதிமன்ற ஒப்புதலுடன் ‘ஜனாதிபதி பொதுமன்னிப்பு’ நிகழ வேண்டும்: சட்ட நிபுணர் கருத்து
வெலிக்கடை சிறைச்சாலை வாசலில் ஆதரவாளர்கள் வரவேற்க காத்திருந்த நிலையில் ஞானசார தேரர் வேறு வழியால், இத்தபானே தம்மாலங்கார தேரரின் வாகனத்தில் எவருக்கும் தெரியாமல் வெளியேறிவிட்டார்.
இந்தியாவில் மோடி, இலங்கையில் ஞானசாரர் ஆகிய இரு காவிகளின் வெற்றியால் நிம்மதியிழக்கப்போகும் சமூகங்களை நினைத்தால் தான் பீதிகொள்ளச் செய்கிறது.
குறைந்தபட்சம் நீதிமன்றத்தால் பிணையில் விடுக்கப்பட்டால் கூட நிபந்தனைகள் உண்டு.
ஆனால் குற்றவாளி ஒருவர் ஜனாதிபதி சலுகையுடன் நேரடியாக தப்பவைக்கப்படுவதென்பது ஊசி போட்டு கட்டுபடுத்துமுன்னமே விசர் நாயை ஓடவிட்டு பலரையும் விசர்கடிக்கு ஆளாக்கும் செயல்.
19வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ‘ஜனாதிபதி மன்னிப்பு’ தொடர்பான அதிகாரம் என்பது நீதிமன்றத்தின் ஒப்புதலுக்குப் பின்னர் நிகழ வேண்டியது என்று பிரபல சட்ட நிபுணர் ஜே.சி. வெலிஅமுன குறிப்பிட்டிருக்கிறார்.
என். சரவணன் – பேஸ்புக் பக்கத்திலிருந்து…