வெலிக்கட சிறைச்சாலையிலிருந்து, வெளியேறினார் ஞானசார
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பைப் பெற்ற பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் சற்று நேரத்துக்கு முன்னர், வெலிக்கட சிறைச்சாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்காக 06 வருட கடூழிய சிறைத்தண்டனையை அனுபவித்து வந்த ஞானசார தேரருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பை வழங்கியதாக நேற்று புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே, உரிய நடவடிக்கைகளின் பின்னர் அவர் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
தொடர்பான செய்தி: ஞானசார தேரருக்கு, 06 வருட கடூழிய சிறைத்தண்டனை: மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு