ஈஸ்டர் தின தாக்குதலை ஆராய, நாடாளுமன்ற தெரிவிக்குழு நியமனம்
ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கான நாடாளுமன்ற தெரிவுக் குழு பற்றி விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று வியாழக்கிழமை இது தொடர்பான அறிவித்தலை சபையில் வெளியிட்டார்.
பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையிலான இந்தக் குழுவில் 08 பேர் அங்கம் வகிக்கின்றனர்.
அமைச்சர்கள் ரஊப் ஹக்கீம், ரவி கருணாநாயக், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ. சுமந்திரன், சரத் பொன்சேகா, ஜயம்பதி விக்ரமரட்ன, ஆஷு மாரசிங்க மற்றும் கவிந்த ஜயவரதன ஆகியோர் இந்தக் குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர் என்று, சபாநாயகர் அறிவித்துள்ளார்.
குறித்த தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து, இந்தக் குழுவினர் நாடாளுமன்றில் அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பார்கள்.