றிசாட்டுக்கு எதிரான நம்பிக்கைஇல்லாப் பிரேரணை: விவாதத்துக்கு திகதி அறிவிப்பு

🕔 May 23, 2019

மைச்சர் ரிஷார்ட் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதற்கான நாள் குறிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஜூன் 18, 19ஆம் திகதிகளில் குறித்த விவாதம் நடத்தப்படும் என்று, சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றில் இன்று அறிவித்தார்.

அண்மைத்த நாட்களில் திகதி குறிக்கப்பட வேண்டும் என்று, சபையில் எதிர்க்கட்சிகள் கோரிய போதும், ஆளுங்கட்சியினர், அதற்கு இங்கவில்லை.

10 குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்