ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு; அறிக்கை வழங்குமாறு சிறைச்சாலைத் திணைக்களத்திடம் கோரிக்கை

🕔 May 21, 2019

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கத் தீர்மானித்துள்ளார் என்று, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்காக, சிறைச்சாலைத் திணைக்களத்திடமிருந்து தேரர் தொடர்பான அறிக்கையொன்றினை, ஜனாதிபதி செயலகம் கோரியுள்ளது.

குறித்த அறிக்கை கிடைக்கப் பெற்றதும், தனது பொதுமன்னிப்பை ஜனாதிபதி அறிவிப்பார் என்றும், அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

வெலிக்கட சிறைச்சாலைக்கு கடந்த வாரம் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்கு ஞானசார தேரரை சந்தித்து உரையாடியிருந்தார்.

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான குற்றத்துக்காக, 06 வருடங்களைக் கொண்ட கடூழிய சிறைத்தண்டனையை, தற்போது ஞானசர தேரர் அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்