ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்: கோட்டா
ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன் என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அல் ஜசீராவிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.
நிச்சயமாக நான் போட்டியிடுவேன். இதை குறித்து நீண்ட காலத்திற்கு முன்பே நான் தீர்மானித்துவிட்டேன். இல்லாவிட்டால் அமெரிக்க பிரஜாவுரிமையை நான் கைவிடவேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
உயிர்த்தஞாயிறு தாக்குதல்களின் பின்னர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளதை சந்தர்ப்பவாதமாக கருதமுடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை நான் நிச்சயமாக ஒரு வாய்ப்பாக அல்லது சந்தர்ப்பமாக கருதவில்லை. தேர்தல்கள் குறித்து நான் அக்கறை காண்பிக்கவில்லை, எனது தேசம் குறித்தே நான் கரிசனையுடன் உள்ளேன்” எனவும் தெரிவித்துள்ளார்.