ஜும்ஆ பிரசங்கம்; காட்டுக் கத்தல்களை தவிர்க்க வேண்டும்

🕔 May 18, 2019

– அஸீஸ் நிஸார்டீன் –

ன்றைய ஜும்ஆ பிரசங்கம் கொழும்பு கிறேன்பாஸ் மஸ்ஜிதில் மற்றுமொரு காட்டுக் கத்தலாகவே அமைந்தது.

அரசியல் மேடைகளில் கூட இவ்வாறு ஆக்ரோஷமாக ‘கத்த’மாட்டார்கள். ஏற்ற இறக்கம் இடைவெளி எதுவும் இல்லாமல் வெறும் இரைச்சலாகவே பிரசங்கம் அமைந்திருந்தது.

பள்ளிவாசலுக்கு வெளியே காவலுக்கு நின்ற ராணுவத்தினர் என்ன நினைத்தார்களோ தெரியாது. பள்ளிவாசல்களில் ஏதோ தீவிரவாதம் போதிக்கப்படுவதாய் பெரும்பான்மை சமூகம் சந்தேகிக்கிறது.

அதை உறுதிப்படுத்தும் தோரணையில்தான் இந்த காட்டுக் கத்தல் அமைந்திருந்தது.

உரை நிகழ்த்தியவரின் கர்ண கடூரமான ஒலி பலரது செவிப்பறைகளை காயப்படுத்தி இருக்க வேண்டும்.தொழுகை முடிந்து கடுமையான தலைவலியோடு அலுவலகம் சென்றேன். பள்ளிவாசல் நிர்வாகம் இப்படியான உப்பு சப்பில்லாத பேச்சுப் பீரங்கிகளுக்கு இனியும் இடம்கொடுக்கக் கூடாது.

மாற்று மதத் தலைவர்கள் அவர்களின் உரைகளை எவ்வளவு மெதுவாக அழகாக முன்வைக்கின்றார்கள். ‘கத்தல்கள்’ இந்த மௌலவிமார்களுக்கு கைவந்த கலையாக இருக்கிறது.

மத்ரஸா பாடத்திட்டத்தில் குத்பா பிரசங்கம் எவ்வாறு மனிதர்களின் மனதைக் கவரும் விதத்தில் நிகழ்த்தப்படவேண்டும் என்ற பயிற்சியும் இந்த மௌலவி பட்டதாரிகளுக்கு கட்டாயம் வழங்கப் படவேண்டும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்