சஹ்ரானுடன் நெருக்கமானோர் இருவர், ஹொரவபொத்தானையில் கைது
பயங்கரவாதி சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில், ஹொரவபொத்தானையில் இன்று இருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதல்களுடன் இவர்களுக்குள்ள தொடர்புகள் குறித்து தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை, முகம்மட் றிஸ்வான் என்பவர் நேற்றைய தினம் மாபோளை – வத்தளை பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தற்கொலைப் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் எனும் சந்தேகத்தில் இவர் கைது செய்யப்பட்டார்.