ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் 85 பேர் கைது; 10 பேர் பெண்கள்
ஈஸ்டர் தின பயங்கரவாதத் தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இவர்களில் 10 பேர் பெண்களாவர்.
கைது செய்யப்பட்டவர்களில் 64 பேர் – குற்றப் புனாய்வுப் பிரிவிலும், 20 பேர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவிலும் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பயங்கரவாதிகள் தங்கியிருந்த 17 பாதுகாப்பான வீடுகள் மற்றும் 07 பயிற்றி முகாம்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.