றிசாட் பதியுதீனுக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு சம்பந்தனிடம் கோரிக்கை
அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் கொண்டு வரவுள்ளதாகக் கூறப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர். சம்பந்தனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு தேசிய ஒன்றியத்தின் அமைப்பாளர் மாகல்கந்தே சுதந்த தேரர், இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
மேற்படி இருவருக்குமான சந்திப்பு இன்று திங்கட்கிழமை கொழும்பில்இடம்பெற்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினை அடுத்து சில ஊடகங்களும், அரசியல்வாதிகளும் றிசாட் பதியுதீன் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.
தொடர்பான செய்தி: என்மீதான குற்றச்சாட்டுகளை கண்டறிய, நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமியுங்கள்: அமைச்சர் றிசாட், சபையில் வேண்டுகோள்