தாக்குதலுக்கு உதவியோருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்: அமைச்சர் அஜித் பீ பெரேரா
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கும், அந்தத் தாக்குதல்களுக்கு உதவியவர்களுக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் என அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் கூறினார்.
தீவிரவாத்ததிற்கு எதிராக மரண தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கு மட்டுமல்லாது அதற்கு உதவி வழங்கியவர்களுக்கும் மரண தண்டனை வழங்குவதற்கான சட்டம் இலங்கையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பயங்கரவாதத்துக்கு உதவுகின்றவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் எனும் பிரேரணையை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் சில நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்ற செயலாளரிடம் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.