மு.காங்கிரஸின் முன்னாள் மாகாண சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்

🕔 May 9, 2019

யர்தர தொலைத் தொடர்பு சாதனமொன்றினை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சாபி ரஹீமை, இம்மாதம் 22ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீர் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் இவர் ஆஜர் செய்யப்பட்டார்.

கடந்த 07ஆம் திகதி முன்னாள் மாகாண சபை உறுப்பினரின் நீர் கொழும்பு வீட்டில் பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, மேற்படி உயர்தர தொலைத் தொடர்பு சாதனம் கைப்பற்றப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்