மதுஷுடன் டுபாயில் கைதான நடிகர் ரயன் 04 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு விடுதலை
மாகந்துர மதுஷுடன் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரபல நடிகர் ரயன் வேன் ரோயனை விடுதலை செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இது தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை விசாரணைக்கு வந்த போது, 4000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.