ஈஸ்டர் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் அனைவரும் இறந்து விட்டனர்
ஈஸ்டர் தினத்தன்று தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பயன்படுத்திய 13 வீடுகளும் 41 வங்கிக் கணக்குகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
இதேவேளை, அவர்கள் பயன்படுத்திய 15 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் அனைவரும் இறந்து விட்டார்கள் அல்லது கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று, பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்தன தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், இலங்கைக்கு பயணிப்பதற்கு தமது நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையை நீக்கிக் கொள்ளுமாறு, இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களிடம், ஜனாதிபதி மைத்திரி கோரிக்கை விடுத்துள்ளார்.