தற்கொலைத் தாக்குதல்தாரியில் ஒருவர் பிரித்தானியாவில் படித்தவர், முதுகலை முடித்தவர்: பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

🕔 April 24, 2019

“நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலில் ஈடுபட்ட பெரும்பாலானவர்கள், நன்கு படித்தவர்கள் மற்றும் நடுத்தர அல்லது உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள்” என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

”அவர்கள் தனிப்பட்ட வகையில் நல்ல பொருளாதார வசதியோடு இருப்பவர்கள். அவர்களது குடும்பம் பொருளாதார ரீதியாக நிலையாக நல்ல நிலைமையில் இருந்துள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.

”தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் பிரிட்டனில் படித்ததாகவும் பின்னர் முதுகலை படிப்பை ஆஸ்திரேலியாவில் படித்து முடித்துவிட்டு இலங்கையில் நிரந்தரமாக குடியேறியதாகவும் அறிகிறோம்” என்றும் ருவன் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக பொறுப்பேற்றது. ஆனால் இதுவரை இந்த தாக்குதலில் அந்த குழு ஈடுபட்டதற்கான நேரடி ஆதாரங்கள் எதையும் அளிக்கவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்