யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் சோதனை நடவடிக்கை
– பாறுக் ஷிஹான் –
யாழ்ப்பாணத்தில் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் பொலிஸார், ராணுவத்தினர் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக புதிய சோனகத்தெரு, செம்மாதரு முஸ்லீம் கல்லூரி வீதி, பொம்மைவெளி, அராலி ஐந்து சந்தி பகுதிகளில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
வெளி மாவட்டங்களில் இருந்து யாழ் நகருக்கு உள்வரும் வெளிசெல்லும் வாகனங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், ராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரின் மோட்டார் சைக்கிள் படையணியினரும் வீதி ரோந்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பள்ளிவாசல்களில் வெளிமாவட்டங்களில் இருந்து தங்கியிருக்கின்ற நபர்கள் தொடர்பாகவும் விபரங்களை பாதுகாப்பு தரப்பினர் சேகரித்து வருகின்றனர்.
இது தவிர முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் அநேகமான கடைகள் பூட்டப்பட்டு அனுதாப வாசகங்கள் அடங்கிய பதாதைகள் சந்திக்கு சந்தி தொங்கவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.