நாட்டில் நடைபெற்ற குண்டுத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர் எனச் சந்தேகிக்கப்படுபவரின் படம் வெளியானது

🕔 April 21, 2019

நாட்டில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்புகளுடன் தொடர்பு பட்டவர் எனச் சந்தேகிக்கப்படும் ஒருவரின் படம் ஒன்றினை ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ளது. இவர் நீர்கொழும்பு தேவாலயத் தாக்குதலுடன் தொடர்பு பட்டவர் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

ஷங்ரிலா ஹோட்டலின் சிசிரிவி காட்சிகளை சோதனைக்கு உட்படுத்திய வேளையில் இரு சந்தேகநபர்கள் சி – 4 வகையைச் சேர்ந்த வெடிபொருட்களை தாக்குதலுக்காக தயார் படுத்திய காட்சிகளை தெளிவாக காணக் கூடியதாக இருந்துள்ளது.

மேலும் குறித்த ஹோட்டலின் கொரிடோர் மற்றும் உணவகத்தில் குறித்த வெடிப்பொருட்களை வைத்த காட்சிகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை கொழும்பு – கட்டுவப்பிட்டிய கத்தோலிக்க தேவாலயத்துக்கு குண்டை கொண்டு வந்த நபரின் முகம் தெரியும்படியான சிசிரிவி காட்சிகள் பாதுகாப்புப் பிரிவனரிடம் கிடைக்கப்பெற்றுள்ளன.

இன்றைய தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களில் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று தாக்குதலை நடத்தியவர்கள் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 450 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்