மத்திய வங்கி பிணை முறியில் மோசடி இடம்பெற்றதை, சஜித் ஏற்றுக் கொண்டுள்ளார்: மஹிந்த தெரிவிப்பு

🕔 April 20, 2019

த்திய வங்கியின் பிணை முறியில் மோசடி இடம்பெற்றுள்ளதாக சஜித் பிரேமதாஸ ஒப்புக்கொண்டுள்ளதாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் தமிழ் வர்த்தகர்களை இன்று சனிக்கிழமை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனைக் கூறினார்.

சஜித் பிரேததாஸ குறித்து அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தொன்றுக்கு, அண்மையில் சஜித் பிரேமதாஸ பதிலளித்திருந்தார்.

இதன்போது, மத்திய வங்கியை ரவி கருணாநாயக்க கொள்ளையிட்டதாக, சஜித் பிரேமதாஸ குத்திக் காட்டியிருந்தார்

இதனைக் குறிப்பிட்டே, மேற்படி விடயத்தை மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: தந்தையை வைத்து அரசியல் செய்ய முடியாது: ரவி; வங்கி கொள்ளை அடித்தவர்கள் வீராய்ப்பு பேசுகின்றனர்: சஜித்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்