ரணில்தான் ஜனாதிபதி வேட்பாளர்: அமைச்சர் லக்ஸ்மன் தெரிவிப்பு
ராஜபக்ஷ தரப்பில் ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் பணியை கணவன், மனைவி, மகன், சகோதர்கள் இணைந்த குடும்பமே தீர்மானிப்பதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
எனவே, இது குடும்ப ஆதிக்க அரசியல் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
எனினும், தமது கட்சியில் இவ்வாறானா முடிவுகள் எடுக்கப்படுவதில்லை என சுட்டிக்காட்டிய அமைச்சர் கிரியெல்ல, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூடி, ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இறுதித் தீர்மானம் எட்டப்படும் எனக் கூறினார்.
கட்சித் தலைவராக ரணில் விக்ரமசிங்க பதவி வகிக்கின்றமையினால், அவரே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்தார்.
தாமரை மொட்டை சின்னமாகக் கொண்ட, பொதுஜன பெரமுன கட்சியிலேயே, மஹிந்த ராஜபக்ஷ தரப்பிலான ஜனாதிபதி வேட்பாளர் களமிறங்குவார் என, அரசியல் அரங்கில் பேசப்பட்டு வரும் நிலையில், அமைச்சர் லக்ஸ்மன் மேற்படி விடயங்களைக் கூறியுள்ளார்.