ஜுன் மாதம் மாகாண சபைத் தேர்தல்: அறிவிப்பை வெளியிட ஜனாதிபதி தீர்மானம்

🕔 April 16, 2019

மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் ஜுன் மாதம் நடத்துவதற்கான அறிவிப்பை விடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என்று, அவருக்கு நெருக்கமான தரப்பு தெரிவித்துள்ளது.

பழைய தேர்தல் முறையிலேயே மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் எனவும், அந்தத் தரப்பு கூறியுள்ளது.

தொகுதிகளை எல்லை நிர்ணயம் செய்வதிலுள்ள தாமதம் காரணமாகவே, புதிய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாமல் உள்ளது.

எவ்வாறாயினும், பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம் மேற்கொள்ளுமாயின், எல்லை நிர்ணயம் ஒரு பிரச்சினையாக அமையாது.

இருந்த போதிலும் மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துவதில் ஜனாதிபதியும், அரசாங்கமும் ஒரே முடிவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments