‘புதிது’ செய்திக்கு பலன்; நீரிணைப்புக்கான குழாய் நிலத்தில் புதைக்கப்பட்டது

🕔 April 15, 2019

ட்டாளைச்சேனை பிரதேசத்தில் நிலத்தின் மேலால் குழாய்களைக் கொண்டு சென்று, நீரிணைப்பு வழங்கியுள்ளதாக புதிது செய்தித்தளம் சுட்டிக்காட்டி வெளியிட்டிருந்த செய்தியினை அடுத்து, அந்த விடயத்துக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

மேற்படி விடயம் தொடர்பாக செய்தி வெளியானதை அடுத்து, நிலத்தின் மேலால் கொண்டு செல்லப்பட்ட குழாய்கள், நிலத்தில் புதைக்கப்பட்டுள்ளன.

தேசிய நீர்வழங்கள் அதிகார சபையினால் நீரிணைப்பு வழங்கப்படும் போது, அதற்குரிய குழாய்கள் ஆகக்குறைந்தது 02 அடி நிலத்தில் புதைக்கப்பட வேண்டும் என, அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், ஊடகம் என்கிற வகையில் நாம் சுட்டிக்காட்டியிருந்த தவறொன்று உடனடியாகத் திருத்தியமைக்கப்பட்டமை மகிழ்ச்சிக்குரியதாகும்.

தொடர்பான செய்தி: நிலத்தின் மேலால் குழாய் கொண்டு செல்லப்பட்டு, அட்டாளைச்சேனையில் நீரிணைப்பு: பிழையான செயற்பாடு என்கிறார் பிராந்திய முகாமையாளர்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்