‘வசந்தம்’ இர்பானுக்கு இரண்டு விருதுகள்

🕔 April 11, 2019

– முஸ்ஸப் –

னாதிபதி ஊடக விருது வழங்கும் விழாவில், வசந்தம் தொலைக்காட்சி செய்திப் பிரிவின் முகாமையாளர் எம்.எஸ். முகம்மட் இர்பான் இரண்டு விருதுளைத் தனதாக்கிக் கொண்டார்.

ஜனாதிபதிபதி ஊடக விருது வழங்கும் விழா, முதல் தடவையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று புதன்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போதே சிறந்த தொலைக்காட்சி  செய்தி வாசிப்பாளர் மற்றும் சிறந்த ஆய்வு நிகழ்ச்சி ஆகியவற்றுக்கான விருதுகளை இர்பான் பெற்றுக்கொண்டார்.

வித்தியா கொலை தொடர்பில் வசந்தம் தொலைக்காட்சியில் இர்பான்  வழங்கிய நிகழ்ச்சிக்காகவே, ‘சிறந்த ஆய்வு நிகழ்ச்சிக்கான விருது’ வழங்கப்பட்டது.

இலங்கையில் இறுதி யுத்தம் நடைபெற்ற காலத்தில், களத்தில் நின்று செய்திகளை இர்பான் வழங்கியிருந்தார்.

அந்தக் கால கட்டத்திலேயே, பலராலும் அவர் அவதானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்