ஒலுவில் துறைமுக மணலை விற்பனை செய்வதற்கு, பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தடை விதிப்பு

🕔 April 10, 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் –

லுவில் துறைமுக வளாகத்தினுள் குவிக்கப்பட்டிருக்கும் மணலை அகழ்ந்து விற்பனை  செய்வதற்கு, துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தடை விதித்துள்ளார்.

கொழும்பு துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் கட்டிடத்தில் இன்று புதன்கிழமை  துறைமுக அதிகார சபை உயரதிகளுடன் இடம் பெற்ற  விசேட கலந்துரையாடலின் போதே, தடை விதிக்கும் இந்த தீர்மானத்தை உரிய அதிகாரிகளுக்கு பிரதி அமைச்சர்  தெரிவித்தார்.

ஒலுவில் துறைமுகத்தில் குவிக்கப்பட்டுள்ள மணலை அகழ்ந்து விற்பனை செய்வதற்கான திறந்த விலை மனுக்கோரலுக்கான  பத்திரிகை விளம்பரத்தினை துறைமுக அதிகார சபை செய்திருந்தது.

இந்த நிலையில்  ஒலுவில் பள்ளிவாசல் சம்மேளனம் மற்றும் மக்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, மண் விற்பனையை பிரதி அமைச்சர் நிறுத்தியுள்ளார்.

குறித்த சந்திப்பில் இலங்கை துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவப் பணிப்பாளர் அதுல ஹேவவிதாரன உள்ளிட்ட  பல முக்கிய உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்