நாய்க் குட்டிகளை அன்பளிப்பாக வழங்கிய பொலிஸ் மா அதிபர்

🕔 April 9, 2019

அடையாளப் படம்

பொலிஸ் நாய் பிரிவுக்கு 07 நாய்க் குட்டிகளை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அன்பளிப்பாக வழங்கியுள்ளதாக, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தான் செல்லமாக வளர்த்து வரும் நாய்களுக்குப் பிறந்த குட்டிகளையே அவர் இவ்வாறு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

மேற்படி நாய்க் குட்டிகள் ‘லப்ரேடர்’ இனத்தைச் சேர்ந்தவையாகும்.

தாய்ப் பால் மறந்த பின்னர், இந்த நாய்க்குட்டிகளை பொலிஸ் நாய் பிரிவுக்கு அன்பளிப்பாக பொலிஸ் மா அதிபர் வழங்கியுள்ளதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்