கோட்டாவுக்கு எதிரான வழக்கின் ஆவணங்கள் கையளிக்கப்படும் படம் வெளியானது

🕔 April 9, 2019

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் கையளிக்கப்படும் போது எடுக்கப்பட்ட படமொன்று வெளியிடப்பட்டுள்ளது.

கோட்டாவிடம் இந்த ஆவணங்களைக் கையளித்த ‘பிரீமியர் குறூப் இன்ரநஷனல்’ எனும், புலனாய்வு மற்றும் பாதுகாப்பு தனியார் நிறுவனம், தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தை வெளிட்டது.

அமெரிக்காவின் கலிஃபோனியா மாநிலத்துக்கு கோட்டாபய ராஜபக்ஷ பயணம் மேற்கொண்டிருந்த போதே, அவரிடம் இந்த ஆவணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

கோட்டாவிடம் ஆவணங்கள் கையளிக்கப்பட்டதாகத் தெரிவித்து வெளியிடப்பட்டுள்ள படத்தில், அவரின் மனைவியும் காணப்படுகின்றார்.

கோட்டாபய ராஜபக்ஷவிடம், அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தொடர்பான ஆவணங்கள் கையளிக்கப்பட்டதாக கூறப்படும் செய்தியினை, இந்தப் படம் வெளியாகுவதற்கு முன்னர், நாமல் ராஜபக்ஷ மறுத்திருந்தார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் நாமல் ராஜபக்ஷ மேற்படி மறுப்பினை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: கோட்டாவுக்கு எதிராக அமெரிக்காவில் இரு வழக்குகள்: விசாரணையில் சிக்க வைக்கும் இறுதித் தருணம் எனவும் தெரிவிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்