ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதைத் தடுப்பதற்காவே, கோட்டாவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு: பீரிஸ்
ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடுவதைத் தடுப்பதற்காகவே அவருக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்
பொதுஜன பெரமுன சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்காக அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிடும் கோட்டாவின் முயற்சிகளை குழப்புவதற்காக சில சக்திகள் இதனை செய்திருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவுக்கு ஒவ்வொரு வருடமும் கோட்டாபய ராஜபக்ஷ விஜயம் மேற்கொள்கின்ற போதிலும், லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு பத்து வருடங்களிற்கு பின்னரே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
உள்நோக்கம் கொண்டவர்கள் கோட்டாவுக்கு எதிராக நீதித்துறையை பயன்படுத்துகின்றனரா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்பான செய்தி: கோட்டாவுக்கு எதிராக அமெரிக்காவில் இரு வழக்குகள்: விசாரணையில் சிக்க வைக்கும் இறுதித் தருணம் எனவும் தெரிவிப்பு