மாகாண சபைத் தேர்தலை, எந்த சட்டத்தின் கீழ் நடத்துவது; உச்ச நீதிமன்றின் வியாக்கியானத்தை கோருமாறு கடிதம்

🕔 April 8, 2019

மாகாண சபைத் தேர்தலை, எந்தச் சட்டத்தின் கீழ் நடத்தமுடியும் என்பது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை கோருமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை, எந்த சட்டத்தின் கீழ் நடத்துவது என்பது தொடர்பில், சட்டரீதியிலான சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதால், அதனைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்கே மேற்படி கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக, அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மேற்படி விவகாரம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை ஜனாதிபதியால் மட்டுமே பெற்றுக்கொள்ளப்படமுடியும். அதனால்தான், அதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளேன்” என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான நிலைமையை ஏற்படுத்தி கொடுக்குமாறு, ஜனாதிபதியிடம் அக்கடிதத்தின் ஊடாக கோரப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்