இங்கிலாந்தில் ‘கலக்கும்’, ஹசன் அலியின் பேரன்
இங்கிலாந்திலுள்ள ஆரம்பப் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் இலங்கை மாணவரொருவர், கடந்த 09 தினங்களில் நடைபெற்ற வாசிப்பு திறனூட்டலில் 25,000 எழுத்துக்கள் கொண்ட புத்தகங்களை வாசித்த முதலாவது மாணவன் என்ற பாராட்டைப் பெற்றுக்கொண்டார்.
இங்கிலாந்தின் லூட்டன் பிராந்திய பாடசாலை, மாணவர்களின் வாசிப்புத் திறனை ஊக்குவிப்பதற்காக வாராந்த கேள்வி பதில்களை, அக்ஸலரேடெர் கணணி முறையில் பதிவு செய்து ஊக்கமளிக்கின்றது.
இம்முறையின்கீழ் Dallow Primary பாடசாலையில் KS1 வகுப்பில் கற்கும் அபியான் ஆசிப் நிம்றி எனும் மாணவரே, இந்த சாதனையைப் புரிந்துள்ளார்.
இந்த மாணவர் – ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளரும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசன் அலி மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் மூத்த துணைத்தலைவர் மர்ஹும் கவிஞர் மருதூர் கனி ஆகியோரின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.