மின்சார துண்டிப்பு தொடர்பில் அரசாங்கம் கூறும் காரணம் பொய்யானது

🕔 April 3, 2019

நாட்டில் மின்சார துண்டிக்கப்படுவதற்கு, நீர் மட்டத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமல்ல என,ஜேவிபி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி இதனைக் கூறினார்.

அரசாங்கத்திடம் மின்சார விநியோகம் தொடர்பான முறையான திட்டமிடல் இன்மையே இதற்கான காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“தற்போது மின்சார துண்டிப்பு நாடு முழுவதும் மேற்கொள்ளப்படுவதால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.

குறிப்பாக சிறு வர்த்தக முயற்சியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலைமைக்கு நீர்நிலைகளில் போதிய நீர் இன்மையே காரணம் என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால் அதில் உண்மையில்லை.

காலத்துக்கு ஏற்ப மின்சார விநியோகத்தை முகாமை செய்வதற்கான திட்டமிடல் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை” எனவும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்