மீள்குடியேறாதவர்களுக்கு விமோசனம்: விரைவில் அமைச்சரவைப் பத்திரம் தயாராகிறது: அமைச்சர் றிசாட்

🕔 April 2, 2019

நீண்டகால அகதிகளாக இடம்பெயர்ந்து இன்னும் மீள் குடியேறாது அவதிப்படுபவர்களுக்கு விமோசனம் பெற்றுக் கொடுக்கும்வகையில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை   தயாரிக்க இருப்பதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கிண்ணியாவில் இடம்பெற்ற நிகழ்வென்றில் உரையாற்றிய போது இந்த தகவலை வெளியிட்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தனது இந்த முயற்சிக்கு ஐக்கிய தேசியக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆகிய கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளும் அரசியல்வாதிகளும் உதவ வேண்டும் எனவும் பகிரங்க வேண்டுகோள்விடுத்தார்.

மீள் குடியேறாத மக்களின் காணிப்பிரச்சினை, வீ ட்டுப்பிரச்சினை மற்றும்  மலசலகூடப்பிரச்சினை குறித்த தரவுகளை சேகரித்து பட்டியலிட்டு, இரண்டு வார  காலத்தினுள் தருமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.

அத்துடன் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மாத்திரமின்றி  ஜம்மியத்துல் உலமா உட்பட சமூகம் சார்ந்த சிவில் அமைப்புக்கள், நிறுவனங்களும் இதற்கு  உதவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்