மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு, நீதிமன்றத் தீர்ப்பை எதிர்பார்க்கிறோம்: மஹிந்த தேசப்பிரிய
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்டப் பொருத்தம் தொடர்பில், நீதிமன்றத் தீர்பொன்றினை தாம் எதிர்பார்ப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப் பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தலை துரிதமாக நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு உடன்படுவதாகவும், அதற்கு நீதிமன்றின் வழிகாட்டுதல் தேவையாக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
மொறட்டுவ பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இவற்றினைத் தெரிவித்தார்.